Connect with us
   

Cinema

மகாராஜா படத்தை தவறவிட்ட சாந்தனு…. பாக்கியராஜ் தான் காரணமா…???

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மகாராஜா படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சாந்தனு தானாம். அதாவது நித்திலன் அவரின் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்தின் மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம். அவருக்கு பிடித்து விட்டது. ஆனால் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லையாம். அதனால் நித்திலன் குரங்கை பொம்மை படத்தை எடுக்க சென்றுவிட்டாராம். அதன் பின்னர் கதையில் சில மாற்றங்கள் செய்து விஜய் சேதுபதியை வைத்து தற்போது இயக்கியுள்ளார். இந்நிலையில் சாந்தனு இந்த படத்தில் நடிக்காததற்கு அவரின் அப்பா பாக்கியராஜ் தான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். தற்போது இதற்கு பதிலளித்துள்ள சாந்தனு, “இந்த கதையை நிராகரித்ததில் எனக்கும் என் அப்பாவுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. நித்திலன் என்னை அணுகியது என் அப்பாவுக்குக் கூட தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. ஆனால் இன்று படத்தின் கதை தான் பெரிய விஷயமாக மாறிவிட்டது. காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்” என சற்று கோபமாக பதிவு செய்துள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top