Cinema
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பா…??? வெளியான ஷாக் நியூஸ்….!!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுவரை இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு முக்கிய காரணம் ரவுடி சம்மோ செந்தில் தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சம்மோ செந்தில் சிக்கவில்லை. எனவே அவனின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் அவனும் சிக்கவில்லை. இதனிடையே இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் மோனிஷா குற்றவாளியுடன் பல முறை தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.