
Television
வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ருதி… பேச்சை கேட்காததால் கோபத்தில் விஜயா…!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்கிறார். மீனா முத்துவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது வழக்கம்போல விஜயா அவர்களை திட்டுகிறார்.

#image_title
அண்ணாமலை எதுவும் பேசாமல் இருக்கிறார். அந்த சமயத்தில் முத்து மற்றும் விஜயா இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பின் இனி இதுபோன்ற தவறை செய்யாதே என்று மட்டும் அண்ணாமலை கூறுகிறார். பின் ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லாததால் ரவியை லீவு போடுமாறு கூறுகிறார்.

#image_title
ஆனால் ரவியின் ஓனர் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறியதால் ரவி கிளம்பி விடுகிறார். இதனால் கோபமடைந்த ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்புகிறார். மீனா எவ்வளவு தடுத்தும் ஸ்ருதி கேட்காமல் கிளம்புகிறார். அப்போது வரும் விஜயா மீனாவை திட்டிவிட்டு ஸ்ருதியை சமாதானம் செய்கிறார்.

#image_title
இருப்பினும் அவர் பேச்சை கேட்காத ஸ்ருதி சென்று விடுகிறார். இதனால் கோபமடைந்த விஜயா ரவிக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார். மேலும் நீ அவளை கூப்பிட போகாத அவளே வரட்டும் திமிரு பிடித்தவள் என்று ஒன்னுக்கு ரெண்டாக ரவியை ஏத்தி விடுகிறார். இதை கேட்டு ரவி அமைதியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.