Cinema
என் மகன்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை…. இது பொய்யான புகார்… கதறும் பாடகர் மனோவின் மனைவி….!!!
பிரபல பாடகர் மனோவின் மகன்கள் இருவரும் சிறுவனை தாக்கியதாக கூறி போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த புகார் குறித்து பேசியுள்ள பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கூறியிருப்பதாவது, “அந்த பசங்க மீது போலீசில் புகார் கொடுக்கலாம் என முன்பே என் மகன்கள் கூறினார்கள். ஆனால் நான் தான் என் கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் தேவை இல்லாத பிரச்சனை வேண்டாமென கூறிவிட்டேன். இதற்கிடையில் என்னென்னவோ நடந்து விட்டது. அதற்குள் என் மகன்கள் குறித்து ஏதேதோ செய்தி போட்டு விட்டார்கள். இதனால் என் மகன்கள் பயந்து விட்டார்கள். அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை. நானே அந்த கவலையில் தான் இருக்கிறேன். எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும், எனது மகன்கள் மற்றும் அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. மகனின் நண்பருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனக்கு கை, முகத்தில் காயம். மகன்களுக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. உண்மைத் தெரியாமல் தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம்” என ஜமீலா மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.