Cinema
போன் செய்து வீட்டுக்கு வர சொன்னார்…. கவிஞர் வைரமுத்து குறித்து பாடகி சுசித்ரா கூறிய ஷாக் நியூஸ்….!!!
சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து மிகவும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசி வரும் பிரபல பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவிஞர் வைரமுத்து குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “வைரமுத்து எப்போது யாருக்கு போன் செய்தாலும் உங்கள் குரலில் காமம் உள்ளது. உங்கள் குரலை கேட்டு நான் மயங்கி விட்டேன். உங்கள் குரலுக்கு நான் அடிமையாகி விட்டேன் என்று தான் பேசுவார். பாடகிகளிடம் மட்டுமல்ல அவர் எல்லா பெண்களிடமும் அப்படி தான் பேசுவார். நான் “மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே” என்ற பாடல் பாடி இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு போன் செய்த வைரமுத்து உன் குரலில் காமம் இருக்கிறது. அவ்வளவு அருமையாக இருக்கிறது. ஆகா ஓகோ என்று புகழ்ந்தார். அதனை தொடர்ந்து நீ வீட்டுக்கு வா உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் என்று கூறினார். அவர் எதற்காக என்னை அழைக்கிறார் என்று நன்றாகவே புரிந்தது. எனவே நான் என் பாட்டியை உடன் அழைத்து சென்றேன். என் பாட்டியை கண்டதும் அவர் பயந்து விட்டார். என் பாட்டி வைரமுத்துவை நாக்கை பிடுங்குவது போல கேள்விகள் கேட்டார். இந்த மாதிரி மோசமானவங்க நிறைய பேர் நம்மள சுத்தி இருக்காங்க. இவங்களுக்கு வயசு வித்தியாசமே கிடையாது” என அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.