Television
அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நின்ற முத்து…. உண்மையை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய மீனா….!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவை பார்க்க பார்வதி வருகிறார். இருவரும் பேச தொடங்கும் முன்பே விஜயாவிற்கு வயிற்றை கலக்க பாத்ரூமுக்கு ஓடுகிறார். இப்படி மாறி மாறி பாத்ரூமுக்கு செல்லும் விஜயா ஒரு கட்டத்தில் முடியாமல் சோர்ந்து படுத்து விடுகிறார்.

#image_title
அதை பார்த்து அனைவரும் பதற முத்து டாக்டருக்கு போன் செய்து வர சொல்கிறார். இதற்கிடையில் மீனா அந்த பெண்ணிடம் சென்று கேட்க அவரோ அதெல்லாம் ஒன்னும் ஆகாது ரெண்டு நாளைக்கு வயித்தால போகும் அப்புறம் சரியாகிடும் என்று கூறுகிறார்.
அந்த சமயத்தில் விஜயாவை பார்க்க வரும் மருத்துவரும் அவர் சாப்பிட்டது ஒத்துக்கல என்று சொல்ல அப்படி என்ன சாப்பிட்ட என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் ஜூஸ் தான் குடிச்சேன் என்று சொல்ல அதுக்கு எப்படி ஃபுட் பாய்சன் ஆகும் என அனைவரும் யேசிக்கிறார்கள்.

#image_title
அப்போது அங்கு வரும் மீனா அந்த ஜூஸில் முத்துவுக்காக மருந்து கலந்த விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டதும் என்னை கொல்லதான் அவ வேனும்னே இதை பண்ணிருக்கா என்று விஜயா கத்துகிறார். மேலும் மனோஜ் இவன் அந்த மருந்தை கூட சரக்குல கலந்து குடிப்பான் என்று கிண்டல் செய்கிறார்.
பதில் எதுவும் பேச முடியாமல் தவிக்கும் முத்து சோகமாக மாடிக்கு செல்கிறார். அப்போது அங்கு வரும் மீனாவிடம் நான் சத்தியமா அன்னைக்கு குடிக்கல. நீ வாங்கி கொடுத்த கார் அது என்று கூறி மீனா மடியில் படுத்து கொண்டு அழுகிறார். இதனால் மீனா உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடிக்க முடிவெடுக்கிறார்.

#image_title
அதன்படி நாளைய ப்ரோமோவில் பாரில் இருக்கும் சிசிடிவியை பார்க்கும் மீனா அதில் முத்து குடிக்கவில்லை என்பதையும், சிட்டி வீடியோ எடுப்பதையும் பார்க்கிறார். இதை வைத்து முத்து நிரபராதி என்று மீனா நிரூபிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.