Television
சிட்டியை அடிக்க கை ஓங்கிய மீனா… அக்காவிடமே எகிறிய சத்யா….!!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வழக்கம் போல கார் செட்டில் அவர் நண்பர்களுடன் பேசி கொண்டிருக்க அங்கு வரும் ஜோசியர் ஒருவர் முத்துவிடம் உன் கைய காட்டு என்று கூறுகிறார். அதற்கு முத்து காசு கொடுத்து டீ ஏதாவது சாப்பிடுங்க என்கிறார்.

#image_title
ஆனால் அந்த ஜோசியரோ எனக்கு பணம் எல்லாம் வேண்டாம். ஜக்கம்மா உன்கிட்ட ஏதோ சொல்ல சொல்றா என்று கையை காட்ட சொல்கிறார். உடனே முத்து கையை காட்ட நீ இன்னைக்கு எது பண்ணாலும் யோசிச்சு பண்ணனும். இல்லைனா இந்த ஊரு உன்னை ஏசும் என்று கூறுகிறார்.
அதனை தொடர்ந்து ஏரியா தலைவர் முத்துவுக்கு போன் போட்டு வர சொல்கிறார். அங்கு அவரின் நண்பர் என்று முத்துவை ஒருவருக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, அவருக்கு கார் வாங்க வேண்டும். உனக்கு தான் காரை பத்தி எல்லாமே தெரியுமே அதான் உன்னை வர சொன்னேன் என்று கூறுகிறார்.

#image_title
இதற்கிடையில் தனது அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று மீனா அவரை பார்க்க போக அங்கு சத்யா சிட்டியுடன் வண்டியில் வந்து இறங்குகிறார். உடனே கோபமாகும் மீனா சிட்டியை திட்டுவதோடு அடிக்கவும் கை ஓங்குகிறார். அப்போது சத்யா அக்கா என்றும் பாராமல் மீனாவிடமே சண்டை போடுகிறார்.
மற்றொரு புறம் முத்து அந்த நபரை தனக்கு தெரிந்த கார் ஏஜென்சி ஒன்றிற்கு அழைத்து செல்ல அங்கு ஏற்கனவே மனோஜ் மற்றும் ரோகிணி கார் ஒன்றை தேர்வு செய்து வைத்துள்ளனர். அதே காரை முத்து தேர்வு செய்ய இருவருக்கும் இடையே பிரச்சனை வருகிறது.

#image_title
இறுதியாக முத்து அந்த ஏஜென்சி உரிமையாளரிடம் பேசி அந்த நபருக்கே காரை வாங்கி கொடுக்கிறார். இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி முத்து மீது கோபத்துடன் அங்கிருந்து செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.