Connect with us
   

Television

சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோவுக்கு திருமணம்…. மணப்பெண் இந்த விஜய் டிவி நடிகை தானாம்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் தான் நடிகர் வெற்றி வசந்த். ஆரம்ப காலத்தில் யூடியூப் வீடியோக்களில் நடித்து வந்த இவருக்கு சமீபத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது.

#image_title

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வெற்றி வசந்த் தனது நடிப்பு மூலம் சின்னத்திரை விஜய் சேதுபதி என்று பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அதுவும் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி வெற்றி வசந்த் முதன் முறையாக தனது காதலி யார் என்பதை அறிவித்துள்ளார். அவரும் ஒரு சீரியல் நடிகை தான். அவர் வேறு யாருமல்ல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை வைஷு தான். இவரை தான் காதலித்து வருவதாக வெற்றி வசந்த் அறிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vetri Vasanth R (@_vetri_vasanth_r)

இவர்கள் இருவரும் ரொமாண்டிக் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ள வீடியோவை வெளியிட்டு இந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading

More in Television

To Top