Television
மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கும் முத்து…. மீனாவால் சிட்டி செய்த சம்பவம்….!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தலைவரின் நண்பருக்கு கார் வாங்கி கொடுத்ததால் அனைவரும் பாருக்கு செல்கிறார்கள். அப்போது தலைவர் முத்துவை சரக்கடிக்க கூப்பிட முத்துவோ வேலை நேரத்தில் குடிப்பதில்லை என்று மறுத்து விடுகிறார்.

#image_title
எனவே அவரை வெளியே வெயிட் பண்ண சொல்லிவிட்டு அவர்கள் மட்டும் உள்ளே செல்கின்றனர். அந்த சமயத்தில் முத்துவிற்கு ஒரு சவாரி வருகிறது. எனவே தலைவரிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என பாருக்குள் முத்து செல்ல அங்கு தலைவரின் நண்பர் மட்டுமே இருக்கிறார்.
தலைவர் எங்கே என்று கேட்க பாத்ரூம் சென்றிருப்பதாக கூறுகிறார். பின் தலைவர் வந்ததும் முத்துவின் நண்பர் சென்று சரக்கு வாங்கி வருகிறார். பாட்டிலை திறக்க முடியாததால் முத்து அதை வாங்கி திறந்து கொடுக்கிறார். உடனே தலைவரும் சரக்கு தான் அடிக்கல சைடிஷ் ஆவது சாப்பிடு என அவரை அமர்ந்து சாப்பிட வைக்கிறார்.

#image_title
இவை அனைத்தையும் சிட்டி போனில் வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார். பின் முத்து கிளம்பும்போது அவர் மீது எதிரே வந்த நபர் இடிக்க முத்து தடுமாறுகிறார். இது அனைத்தையுமே வீடியோவாக பதிவு செய்த சிட்டி இதுபோன்ற குடிகாரன் காரில் யாரும் செல்ல வேண்டாம் என சோசியல் மீடியாவில் அந்த வீடியோவை பதிவு செய்கிறார்.

#image_title
இதற்கிடையில் அம்மா வீட்டிற்கு சென்ற மீனா அங்கு சத்யா சிட்டியுடன் வண்டியில் வந்து இறங்குவதை பார்த்து கடுப்பாகிறார். எத்தனை தடவ தான் சொல்றது இவன் கூடலாம் சேரதானு என்று கடிந்து கொள்கிறாள். உடனே சத்யா போனில் இருக்கும் வீடியோவை காட்டி அப்போ இந்த மாதிரி குடிகாரன் கூட சேரட்டுமா என்று கேட்க மீனா ஷாக்காகிறார்.