Television
ஒருவழியாக முத்து மீது சுமத்தப்பட்ட பழியை துடைத்த மீனா…. வீடியோவால் ஷாக்கான ரோகிணி….!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து இன்ஸ்பெக்டரிடம் எவ்வளவோ பேசியும் அவர் முத்துவை நம்பாமல் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார். மற்றொருபுறம் முத்துவை காப்பாற்ற அந்த பாருக்கு மீனா செல்கிறார்.

#image_title
அங்கே வீடியோ எடுத்து கொண்டிருந்த யூடியூபர் ஒருவர் காலையிலேயே ஒரு பெண் குடிப்பதற்காக ஒயின் ஷாப் வாசலில் காத்து கொண்டிருக்கிறார் என்று கூறி மீனாவை வீடியோ எடுக்க அதை பார்த்து கடுப்பான மீனா என்ன ஏதுனே தெரியாம வீடியோ எடுத்து தான் என் புருஷன் இன்னைக்கு பிரச்சனைல இருக்காரு.
நான் அவரை காப்பாத்த வந்தேன்டா என்று சொல்லி அந்த நபரின் கன்னத்தில் பளாரென அறை கொடுக்கிறார். பின் பார் ஓனர் வந்ததும் அவரிடம் உண்மையை சொல்லி உதவி செய்யுமாறு மீனா கெஞ்ச அவரும் சிசிடிவி புட்டேஜை காட்டுகிறார். அதை பார்த்து மீனா உண்மையை தெரிந்து கொள்கிறார்.

#image_title
பின் இந்த வீடியோவை ரவிக்கு அனுப்ப சொல்ல நம்பர் கொடுத்து விட்டு ரவியை முத்துவின் கார் ஷெட்டுக்கு வர சொல்கிறார். அங்கு ரவியை கண்ட முத்து நீ எங்கடா இங்க என்ன விஷயம் என்று கேட்க அண்ணி தான் வர சொன்னாங்க என்று ரவி சொல்ல முத்து எதுவும் புரியாமல் குழம்புகிறார்.
பின் அங்கு வரும் மீனா முத்துவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த வீடியோவை காட்டுகிறார். பிறகு முத்து எந்த தப்பும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இவர்கள் பதிலுக்கு ஒரு வீடியோ போட அதை அனைவரும் பார்த்து உண்மையை தெரிந்து கொள்கிறார்கள்.

#image_title
சிட்டியை கைது செய்ய அவனோ ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருவதாக கூறுகிறான். ஆனால் முத்து எனக்கு பணம் வேண்டாம் அதுக்கு பதிலா அவனுக்கு தண்டைன கொடுங்க என்று சொல்கிறார். இதற்கிடையில் வீடியோவில் சிட்டியை பார்த்த ரோகிணி இவன்கிட்ட தான வட்டிக்கு பணம் வாங்கிருக்கோம். இவனுக்கும் முத்தவுக்கும் என்ன பிரச்சனை என்று யோசித்து பதறுகிறார்.