Cinema
விஜய் கொஞ்சமாவது அரசியல் பேச வேண்டும்…. அறிவுரை கூறிய கார்த்திக் சிதம்பரம்…!!!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதில் இருந்து அரசியல் தொடர்பான பல விஷயங்களை செய்து வருகிறார். உதாரணமாக மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்குவது, நீட் தேர்வு குறித்து பேசுவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது நேரில் சென்று பார்த்தது, வயநாடு மக்களுக்கு இரங்கல் தெரிவித்தது போன்றவை தான். ஆனால் இதை தவிர்த்து விஜய் பெரிதாக அரசியல் பேசுவதில்லை என அவர் மீது விமர்சனம் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம், “நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருந்தாலும் மத்திய பட்ஜெட், ஹிண்டர்பர்க் அறிக்கை உள்ளிட்ட பிரச்சனைகளில் அவருடையை கருத்து, நிலைபாடு என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு வழ்த்து கூறுவதும் பெரிதல்ல. அரசியல் பேச வேண்டும்” என அறிவுரை கூறியுள்ளார்.