
Cinema
திடீரென கோபப்பட்ட சிவாஜி கணேசன் மகன்… மேடையிலேயே அடித்த சம்பவம்….!!!!
தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்த சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள் விழா இன்று கெண்டாடப்பட்டது. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் மகன்களான நடிகர் பிரபு மற்றும் தயாரிப்பாளர் ராம்குமார் ஆகியோர் சிவாஜி சிலைக்கு மணி அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது ராம்குமார் திடீரென கோபப்பட்டு ஒருவரை அடித்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கூட்டத்தில் மேடையில் பின்னாடி இருந்து ஒருவர் ராம்குமாரை முந்திக் கொண்டு முன்னே வர முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராம்குமார் அந்த நபரை ஆவேசத்துடன் குத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை கண்ட ரசிகர்கள் பொதுவெளியில் பிரபலமான ஒரு நடிகரான சிவாஜியின் மகன் இப்படியா கோபத்தை வெளிப்படுத்துவது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.