Gallery
ப்ரீத்தா வீட்டில் நடந்த பூஜையில் கணவருடன் பங்கேற்ற சினேகா…!!!
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான ப்ரீத்தா விஜயகுமார் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் சந்திப்போமா என்ற படம் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து நிறைய தெலுங்கு படங்களில் நடித்த இவர் தமிழில் புன்னகை தேசம், சுயம்வரம் மற்றும் அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

#image_title

#image_title

#image_title
அதிலும் குறிப்பாக படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்ததன் மூலம் ப்ரீத்தா மிகவும் பரிட்சயமான நடிகையாக வலம் வந்தார்.

#image_title

#image_title
அதன் பின்னர் பிரபல இயக்குனர் ஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ப்ரீத்தா இப்போது வரை படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

#image_title

#image_title
இந்நிலையில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு ப்ரீத்தா ஹரி தனது வீட்டில் பூஜை நடத்தியுள்ளார். இதில் ப்ரீத்தாவின் சகோதரிகள் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#image_title

#image_title
அவர்கள் தவிர நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் மகள் உள்ளிட்டோருடன் பூஜையில் கலந்து கொண்டார். ப்ரீத்தா மற்றும் சினேகா இருவரும் புன்னகை தேசம் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.