General
அரசுப்பள்ளியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு…. சர்ச்சையில் முடிந்த சம்பவம்….!!!!
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே நேரத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் மகாவிஷ்ணு என்பவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால் தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என கூறினார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மகாவிஷ்ணு மற்றும் ஆசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.