
Television
மீனா பேச்சை கேட்காம ஸ்ருதியிடம் வாங்கி கட்டி கொண்ட விஜயா….!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதிக்கு ஒரு பார்சல் வருகிறது. மீனா அதை வாங்க போகும் போது அவரை தடுக்கும் விஜயா என் மருமக தான் என்று கூறி அந்த பார்சலை வாங்கியதோடு அதை பிரிக்க முயல்கிறார். அப்போது மீனா அத்தை அதை பிரிக்காதீங்க என்று கூறுகிறார்.

#image_title
அதற்கு விஜயாவோ ஸ்ருதி என் மருமக எங்களுக்கு நடுவுல நீ வராத என்று திட்டுகிறார். பின் பார்சலை பிரிக்க அதில் ஹெட் போன் உள்ளது. அதை எடுத்து காதில் மாட்டி பாட்டு கேட்கிறார். அப்போது ரவியும் ஸ்ருதியும் வருகிறார்கள். உடனே விஜயா பார்சல் வந்ததாக கூறி ஸ்ருதியிடம் ஹெட் போனை கொடுக்கிறார்.

#image_title
அதை பார்த்த ஸ்ருதி ஷாக்காகி எனக்கு வந்த பார்சலை யார கேட்டு பிரிச்சீங்க? ரவிக்கே என்னோட பர்சனல் திங்ஸ எடுக்குற உரிமை இல்லை. நீங்க எப்படி எடுக்கலாம் என்று சரமாரியாக திட்டுகிறார். ரவியும் அவரை கன்ட்ரோல் செய்கிறார். பின் கோபமாகும் விஜயா டேய் இது என் வீடு உன் பொண்டாட்டி இப்படி பேசுறா நீயும் அமைதியா இருக்க என்று கூறி ரவியை திட்டுகிறார்.

#image_title
மற்றொரு புறம் சத்யா காலேஜுக்கு செல்லும் முத்து மற்றும் மீனா காலேஜ் ப்யூனை அழைத்து ப்ரின்சிபல் குறித்து விசாரிக்கிறார்கள். சத்யா பரீட்சை எழுத எதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால் அவரோ முடியாது அந்த ப்ரின்சிபல் ஒரு முடிவெடுத்தா அதை மாத்தவே மாட்டாரு என்று கூறுகிறார். பின் அவரிடம் ப்ரின்சிபல் வீட்டு அட்ரஸை முத்து வாங்குகிறார். அதேசமயம் மனோஜ் ஷோரூமுக்கு லாட்டரி டிக்கெட் வாங்கிய அந்த நபர் மீண்டும் வந்து தற்போது தான் கோடீஸ்வரன் ஆகிவிட்டதாக கூறுகிறார். அதை கேட்டு மனோஜ் ஷாக்காவதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.