
Television
கேலி செய்த சக போட்டியாளர்கள்…. சரியான பதிலடி கொடுத்த நடிகை ஸ்ருதிகா….!!!!
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிகா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் ஹிட்டாகாததால் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினார்.

#image_title
இதற்கிடையில் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என்று செட்டிலான ஸ்ருதிகா ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மீடியாவிற்கு கம்பேக் கொடுத்தார்.
அந்த நிகழ்ச்சி மூலம் ஸ்ருதிகா ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து விட்டார். அதனை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ஸ்ருதிகா தனது குழந்தைத்தனம் காரணமாக பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறார்.

#image_title
இந்நிலையில் ஸ்ருதிகா பேசுவதை சிலர் பைத்தியம் என்பது போல் விமர்சித்து வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டிலும் சிலர் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் பேசிய ஸ்ருதிகா, “நான் பேசுவதையும், என் மொழியையும் நீங்கள் கிண்டல் செய்வது எனக்கு நன்றாகவே தெரிகிறது.
கிண்டலுக்கும் காமெடிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நீங்கள் என்ன வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், எல்லாம் பேசிவிட்டு எனக்கு தமிழ் நாடு ரொம்ப பிடிக்கும், தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும் என்று சொல்வதை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.