General
ஆக்ஸிஜன் மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்….!!!
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்வதற்காக ஒரு வார பயணமாக விண்வெளிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற விண்கலனில் ஏற்பட்ட பழுது காரணமாக அவர்களால் பூமி திரும்ப முடியவில்லை. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தான் திரும்புவார்கள் என நாசா அறிவித்தது. இந்நிலையில் தற்போது விண்வெளியில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாசா, “தற்போதைய சூழலில் பயப்படும்படியாக எதுவும் இல்லை. தேவையான உணவு, ஆக்சிஜன் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற இரு ஸ்பேஸ்கிராப்ட் வழியாக 8,200 பவுண்ட் உணவு, தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருக்கும் கூடுதல் நாள்களுக்கு ஏற்ப உணவு பொருள்கள் உள்ளன” என கூறியுள்ளது.