General
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப ஆறு மாதங்கள் ஆகுமாம்….!!?
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்திற்கு சென்றனர். திட்டமிட்டபடி இருவரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதியே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவர்கள் பூமிக்கு திரும்பவில்லை. இந்நிலையில் விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் இருவரையும் பூமிக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளார்களாம். இதனை தொடர்ந்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.