
General
விஜய்யிடம் கேள்வி கேட்ட அரசு மக்களை காக்க தவறியது ஏன்..?? தமிழிசை கேள்வி….!!!!
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் கூட்டத்தில் 5 பேர் வெயில் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு சரியான முன்னேற்பாடுகள் செய்யாததே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த வகையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியிருப்பதாவது, “நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்ட அரசு, அதே ஏற்பாடுகளை தற்போது செய்யாதது ஏன்? நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்?” என பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.