General
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழிசை செளந்தர்ராஜன்….!!!
நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் கெளரவித்தார். இதற்காக குமரி அனந்தனின் மகளும் பாஜக பிரமுகருமான தமிழிசை செளந்தர்ராஜன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து, “எம் தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணின் பெருமைக்கும் உழைத்த எனது தந்தையின் வாழ்நாள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் போற்றப்படுவதைக் கண்டு மகளாக மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என தெரிவித்துள்ளார்.