
General
மும்பை போலீசில் சிக்கிய டிடிஎஃப் வாசன்….. இதே வேலையா தான் இருப்பாரு போல…!!!
தமிழ்நாட்டில் பிரபலமான யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன் அடிக்கடி ஆபத்தான முறையில் பைக் ஓட்டி வழக்கில் சிக்கி வந்த நிலையில், நீதிமன்றம் இவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது. அதன் பின்னர் கார் ஓட்டுவதற்காக லைசன்ஸ் விண்ணப்பித்து பெற்றுள்ள டிடிஎஃப் வாசன் தற்போது இந்தியா முழுவதும் காரில் பயணம் செய்து அதை வீடியோவாக அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக டிடிஎஃப் வாசனுக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அதாவது இந்திய மோட்டார் வாகன சட்டப்படி காரில் பயணிப்பவர்கள் கார் ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி டிடிஎஃப் வாசன் கார் ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்த மும்பை போலீசார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் இங்க தான் அடிக்கடி போலீசில் மாட்டுகிறார் என்றால் மும்பை வரைக்கும் சென்று தமிழ்நாட்டு மானத்தை வாங்கி விட்டாரே என விமர்சித்து வருகிறார்கள்.