Gallery
சிஎஸ்கே தீமில் கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய நட்சத்திரா நாகேஷ்….!!!!
தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நட்சத்திரா நாகேஷ் அதனை தொடர்ந்து திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.

#image_title

#image_title
பின்னர் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொண்ட நட்சத்திரா தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

#image_title

#image_title
இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது.

#image_title

#image_title
இதற்கிடையில் நட்சத்திரா கடந்த 2021 ஆம் ஆண்டு ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராகவ் நட்சத்திராவின் ஸ்கூல் சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாற இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

#image_title

#image_title
இந்நிலையில் நட்சத்திரா நாகேஷ் அவரது கணவரின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். ராகவ் தீவிரமான சிஎஸ்கே ரசிகர் என்பதால் அந்த தீமில் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.