
General
மாநாட்டு தேதியை அறிவித்த தவெக தலைவர் விஜய்…. குஷியில் தொண்டர்கள்…!!!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நடைபெறுவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தற்போது விஜய் கட்சி மாநாட்டின் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
— TVK Vijay (@tvkvijayhq) September 20, 2024