General
நீங்க பொண்ணா மாறி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க…. கடவுளிடம் கோரிக்கை வைத்த முரட்டு சிங்கிள் இளைஞர்…!!!
நீண்ட காலம் திருமணத்திற்கு பெண் பார்த்து வரன் அமையவில்லை என்றால் கடவுளிடம் சென்று எப்படியாவது திருமணமாக வேண்டும் அல்லது பெண் கிடைக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பது வழக்கம். ஆனால் இங்கு ஒரு நபர் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி கைலாய மலையில் உள்ள சிவபெருமானுக்கு கடிதம் எழுதியுள்ள அந்த வாலிபர், “நான் பலமுறை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தும் நடக்கவில்லை. எனவே கடைசி முயற்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு இனி காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சம்மதம் தான். எனவே சிவபெருமானே நீங்கள் பெண்ணாக மாறி என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக ஒரு கிலோ கஞ்சாவை காணிக்கையாக தருகிறேன்” என எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.