General
அம்மனுக்கு பால் குடம் எடுக்கும் மியா கலிஃபா….!!! இளைஞர்களின் செயலால் ஷாக்கான மக்கள்…!!!
ஊர் திருவிழா அல்லது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமாக பேனர் அடிப்பது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் அடித்துள்ள பேனர் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு 12 ஆம் ஆண்டு வளைகாப்பு வைபவம் நடைபெற இருந்தது. இதற்காக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருவிழாவிற்கு பேனர் அடித்துள்ளனர். அதில் நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை அச்சடித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஷாக்காகியுள்ளனர்.