Connect with us
   

General

படகு வாங்கிய சென்னை மாநகராட்சி நிர்வாகம்….. பீதியில் மக்கள்…!!!

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் போது சென்னை தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இந்தாண்டு வரும் 18 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் வடகிழக்கு பருவமழை முன்பை விட இந்தாண்டு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் படகுகள் வாங்கியுள்ளது. அதன்படி மழை காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. இதை பார்த்த மக்கள் என்ன ரியாக்ட் செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார்கள்.

Continue Reading

More in General

To Top