Cinema
வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு…. சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்….!!!!
தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வரும் வடிவேலு மற்றும் காமெடி நடிகர் சிங்கமுத்து ஆகிய இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் சில பிரச்சனை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் தன்னை பற்றி யூடியூப் சேனல்களில் மிகவும் தவறாக பேசியதோடு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டதாக கூறி 5 கோடி ரூபாய் கேட்டு சிங்கமுத்து மீது வடிவேலு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றந்திற்கு வந்தது. அப்போது சிங்கமுத்து சார்பில் வழக்கில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு சிங்கமுத்துவுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.