Connect with us
   

Television

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கொலை வழக்கு…. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு…!!!

விஜேவாக தனது திரைப்பயணத்தை தொடங்கி பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சித்ரா. இவர் தமிழில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி மற்றும் வேலுநாச்சியார் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கேரக்டர் தான் இவருக்கு பெரியளவில் அடையாளத்தை பெற்று தந்தது. இந்நிலையில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹோட்டல் ஒன்று சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்திற்கு இவரின் வருங்கால கணவர் ஹேமந்த் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டார். இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், பல்வேறு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்புக்கும் அவரது கணவர் ஹேம்நாத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என நிரூபணம் செய்யப்பட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Continue Reading

More in Television

To Top