Cinema
விஜய்யை அவன் இவன் என ஒருமையில் திட்டிய திமுக அமைச்சர்… கோபத்தில் ரசிகர்கள்….!!!
பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய்யை அவன் இவன் என திமுக அமைச்சர் த.மோ.அன்பரசன் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் கூறியதாவது, “கண்டவன்லாம் அரசியலுக்கு வர்றான். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்குறான். ஆனா ரசிகர்களுக்காக ஒரு டிக்கெட் கூட இலவசமா கொடுக்க முடியல. இவன் எல்லாம் அரசியலுக்கு வந்து எப்படி நாட்டை காப்பாத்துவான். உன் மேல பாசமா இருக்குற உன் ரசிகர்களுக்கே இலவசமா டிக்கெட் தராம ஒரு டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விக்கிற. நீயா நாட்டை காப்பாத்த போற” என மிகவும் மோசமாக ஒருமையில் பேசி விமர்சித்துள்ளார். மேலும் அவர் நடிகர் விஜய்யின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் மறைமுகமாக அவர் கூறுவது விஜய்யை தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.