General
இரு உயிர்களை காப்பாற்றிய காட்டு யானைகள்… வயநாடு நிலச்சரிவில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்….!!!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த சுஜாதா என்ற பெண் கூறியுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சூரல்மலையை சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணும் அவரின் பேத்தி மிருதுளாவும் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று இரவு வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி நடக்க தொடங்கியுள்ளனர். அப்போது திரும்பிய திசையெல்லாம் சேறும் சகதியுமாக வெள்ளநீர் சூழ்ந்ததால் மேடான இடம் நோக்கி நடந்த சுஜாதா தனது பேத்தியுடன் ஒரு காபி தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ளார். அப்போது அங்கு 3 யானைகள் இருப்பதை கண்டு அதிர்ந்த சுஜாதா தாங்கள் ஏற்கனவே பெரிய துயரில் இருந்து மீண்டு வந்துள்ளோம். எனவே எங்களை எதுவும் செய்ய வேண்டாம் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அவரின் வலியை புரிந்து கொண்ட யானைகள் அவர்களை ஒன்றும் செய்யாமல் விடியும் வரை அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கேயே இருந்துள்ளன. விடிந்த பின்னர் மீட்பு குழுவினர் வந்த பிறகு தான் யானைகள் அங்கிருந்து சென்றதாக சுஜாதா கூறியுள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.