General
காணாமல் போன உடல்… மகளின் ஒரு கைக்கு மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தை…!!!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் இன்று வரை 387 மக்கள் உயிரிழந்துள்ளனர். பலரது உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 7 வது நாளான இன்றும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் வயநாட்டை சேர்ந்த ராமசாமி என்பவர் காணாமல் போன அவரது மகள் ஜிசா என்பவரை தேடி வந்துள்ளார். தீவிரமான தேடுதலுக்கு பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டுமே கிடைத்துள்ளது. அதில் இருந்த திருமண மோதிரம் மற்றும் அதில் பொறிக்கப்பட்டிருந்த கணவரின் பெயரை வைத்து தான் அது ஜிசா என்பதை ராமசாமி உறுதி செய்தார். இதனை தொடர்ந்து தன் மகளின் அந்த ஒரு கையை தகன மேடையில் வைத்து கதறி அழுதபடி ராமசாமி இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.