Cinema
பாலியல் வழக்கில் சிக்கிய நிவின் பாலி…. வெளியான முக்கிய ஆதாரம்…!!!
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது முற்றிலும் பொய்யான புகார் என நிவின் பாலி மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த புகார் போலியானது என்பதற்கான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்பட்ட அன்றைய தினத்தில் நிவின் பாலி கொச்சினில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்ததற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. மேலும் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் அந்த சமயத்தில் நிவின் பாலி தன்னுடன் இருந்ததாகவும், வருஷங்கள்க்கு சேஷம் என்ற படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் அந்த புகார் போலியானதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.