General
திருமணத்தில் மணமகன் நண்பர்கள் செய்த சம்பவம்…. மிரண்டு போன மணமகள்….!!!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்த முத்துக்குமார் – பவித்ரா ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் நண்பர்கள் ஒப்பந்த பத்திரம் ஒன்றில் மணமகளிடம் கையெழுத்து பெற்றனர். அந்த பத்திரத்தில், “பவித்ரா ஆகிய நான் என் திருமணத்திற்கு பிறகு எனது கணவரை நைட் ஷோ சினிமாவிற்கு அனுப்புவேன். அவர் நண்பர்களுடன் கோவா, பாண்டிச்சேரி, தாய்லாந்து போன்ற ட்ரிப்புக்கு அனுப்புவேன். என் கணவர் அவர்களது நண்பர்களுடன் இருக்கும் சமயத்தில் மைனா பட வில்லி பாணியில் எப்போ வருவீங்க? எப்போ வருவீங்க? என கேட்கமாட்டேன். மேலும் அவர் தூங்கும் போது பாயாகவும், ஏங்கும் போது தாயாகவும் இருப்பேன் என எனது கணவர் முத்துக்குமாருக்கு உறுதியளிக்கிறேன். இப்படிக்கு பவித்ரா” என எழுதி இருந்தது. இதற்கு முழு சம்மதம் தெரிவித்து மணப்பெண்ணும் கையெழுத்து இட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.