General
கற்கள் வீசியது குட்டிச்சாத்தான் அல்ல… சிக்கிய மர்ம நபரை ஊர் கூடி வெளுத்த சம்பவம்…!!!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே உள்ள கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் வீடுகள் மீது கற்கள் விழுவதாகவும், நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்து வருவதாகவும் கிராம மக்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் டிரோன் மூலம் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின்போதே அங்கு கற்கள் வந்து விழுந்தது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த நிர்மல் ராஜ் என்பவர் தான் இரவு நேரங்களில் வீடுகள் மீது கற்கள் வீசி வந்துள்ளார். இது சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை நையப்புடைத்த கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். கல் வீசியதன் காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.