General
நாய்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட வாசனை திரவியத்தால் வெடித்த சர்ச்சை….!!!!
மனிதர்களைவிட அவர்களால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இத்தாலிய நிறுவனமான டால்ஸ் & கபனா என்ற நிறுவனம் நாய்களுக்காக ஃபெஃப் என்ற வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆல்கஹால் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரவியத்தின் விலை 99 யூரோக்கள். அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,000 ஆகும். இந்நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது இதில் உள்ள ரசாயனங்கள் விலங்குகளின் வாசனை உணர்வை குழப்பும் என்று கூறுகிறார்கள். மேலும் நாய்கள் தனது மோப்பதிறனை வைத்து தான் அதிகம் நம்பியுள்ளன. அப்படி உள்ள சூழலில் இந்த வாசனை திரவியங்கள் அவற்றிற்கு ஏற்றதாக அமையாது. அதுமட்டுமின்றி நாய்களும் இதை விரும்பாது என விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியின் மூத்த அதிகாரி ஆலிஸ் பாட்டர் கூறியுள்ளார். பலரும் இவரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.