Connect with us
   

General

கோவில் திருவிழாவிற்கு ஆம்புலன்ஸில் சென்ற அமைச்சர்…. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!!

கேரளாவில் பிரபல நடிகர் மற்றும் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் தான் சுரேஷ் கோபி. இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான தீனா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

#image_title

ஒருகட்டத்திற்கு மேல் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்ட சுரேஷ் கோபி தற்போது மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழாவிற்கு சுரேஷ் கோபி ஆம்புலன்ஸில் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது பூரம் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக திருச்சூருக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே விரைவாக அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக சுரேஷ் கோபி ஆம்புலன்ஸில் சென்றுள்ளார்.

#image_title

இதனை தொடர்ந்து இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் இதுகுறித்து சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “பூரம் திருவிழாவில் நடந்த குளறுபடிக்கு பின்னால் சதி இருக்கிறது. இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் தான் நான் ஆம்புலன்ஸில் சென்றேன்” என கூறியுள்ளார்.

Continue Reading

More in General

To Top