General
லண்டன் வீதிகளை அழகாக்கும் மர்ம ஓவியர்…. அடையாளத்தை காட்ட மறுப்பது ஏன்….????
லண்டன் வீதிகள் முழுவதும் அழகான ஓவியங்களால் வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. முதல் நாள் இரவு வரை வெறுமையாக இருக்கும் சுவர் மறுநாள் காலையில் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்படுகிறது. இந்த ஓவியங்களை பேங்ஸி என்ற ஓவியர் வரைகிறார். ஆனால் அவர் எப்படி இருப்பார்? கருப்பா சிவப்பா என யாருமே பார்த்ததில்லை. ஏனெனில் அவர் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் தான் இந்த ஓவியங்களை வரைந்து வருகிறார். 1990களின் இறுதியில் ஸ்பிரே ஓவியங்களை வரைந்து கவனம் ஈர்த்த பேங்ஸி, கிராஃப்டி பாணியில் ஓவியங்களை வரைந்து வருகிறார். மேலும் தன் படைப்புகளை இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்களில் பதிவேற்றம் செய்து வரும் பேங்ஸி, அவரின் அடையாளத்தை மட்டும் வெளிக்காட்டவில்லை. அவரை பார்க்க மாட்டோமா என பலரும் ஏங்கி வருகிறார்கள்.