General
யானையை கருணைக்கொலை செய்ய முடிவெடுத்த பூங்கா நிர்வாகம்… என்ன காரணம் தெரியுமா…???
கடந்த 1976ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு சைலா ஹிமாலி என்ற பெண் யானை கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதற்கு ஒரு வயது கூட நிரம்பவில்லை. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் வசித்து வரும் ஹிமாலி இதுவரை ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது. மேலும் பல குட்டிகளை வளர்க்கவும் உதவி செய்துள்ளது. ஆனால் தற்போது ஹிமாலியால் சரியாக எழுந்து கூட நிற்க முடியவில்லை. 49 வயதாகும் ஹிமாலிக்கு வயது முதுமை காரணமாக சிறுநீரகங்கள் செயலிழந்து ஹிமாலியால் சரியாக எழுந்து நிற்க கூட முடியவில்லை. எனவே அந்த யானையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் நலன் கருதி அதனை கருணைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.