
General
தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்திய போலீசார்… கோயம்பேட்டில் பரபரப்பு..!!
சென்னையின் பிரதான பேருந்து நிலையமாக இதுநாள் வரை இயங்கி வந்தது கோயம்பேடு பேருந்து நிலையம் தான். ஆனால் சமீபத்தில் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இயங்கி வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையின் மாநகர பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று செல்வதோடு, பணிமனையாகவும் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மீது திடீரென காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு தூங்கக் கூடாது என கூறி அடித்து விரட்டியதால் ஆதரவற்ற நாங்கள் எங்கே செல்வோம் என கூறி பாதிக்கப்பட்ட நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.