General
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை…. ரமணா பட பாணியில் நடந்த கொடூரம்….!!!
விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று இறந்த நபருக்கு சிகிச்சை அளித்து லட்ச லட்சமாக பணத்தை வசூல் செய்வார்கள். அதேபோன்ற சம்பவம் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாபூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (50) என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 2ம் தேதி அறுவை சிகிச்சைக்காக 5.50 லட்சம் பெற்றுள்ளனர். இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறினாலும் வெங்கடேசனை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. மேலும் அவருக்கு மேல் சிகிச்சை செய்ய வேண்டுமென கூறி 4.50 லட்சம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஐசியூ கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தான் இறந்த நிலையில் இருந்த வெங்கடேசனுக்கு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.