Television
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலக இதுதான் காரணம்….??? வெளியான தகவல்….!!!!
சன் டிவி மற்றும் விஜய் டிவியை பொருத்தவரை இரண்டு சேனலுக்கும் இடையே எப்போதும் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் முன்னதாக சன் டிவியில் சப்த ஸ்வரங்கள் என்ற பாடல் நிகழ்ச்சி முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

#image_title
அதை தான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது. அதேபோல சன் டிவியில் தில்லானா தில்லானா என்ற நடன நிகழ்ச்சி முதலில் ஒளிபரப்பானது. அதற்கு பின்னர் தான் விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்தது.
அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற பெயரில் புதிதாக சமையல் நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் பங்கேற்கிறார்.

#image_title
இந்நிலையில் இவர் விஜய் டிவியில் இருந்து விலகியது குறித்த காரணம் தெரியவந்துள்ளது. அதாவது 1999 ஆம் ஆண்டில் இருந்தே வெங்கடேஷ் பட் மீடியா மோஷன்ஸ் டீமுடன் இணைந்து பணியாற்றி வருகிறாராம். ஆனால் கடந்த ஆண்டு திடீரென விஜய் டிவி மீடியா மோஷன்ஸ் டீமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலக்கியது.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மட்டும் இயக்கினால் போதும் என கூறி விட்டதாம். அந்த சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்காக மீடியா மோஷன்ஸ் டீமை சன் டிவி அணுக புதிதாக ஒரு நிகழ்ச்சியை இயக்க கோரியுள்ளனர். அப்போது விஜய் டிவியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிர்வாகம் மொத்தமாக வெளியேறியுள்ளது.

#image_title
எனவே தனக்கு மிகவும் நெருக்கமான டீமை பிரிய மனம் இல்லாமல் தான் வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பணத்திற்காக யாரும் சேனல் மாறவில்லை. அதனை தாண்டி சில பாலிடிக்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.