Connect with us
   

Cinema

யோகி பாபுவால் கடுப்பான பெண்…. அந்த வார்த்தையை கேட்டு அதிரடி முடிவெடுத்த யோகி பாபு….!!!!

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த படமாக இருந்தாலும் யோகி பாபு இல்லாமல் இருக்க மாட்டார். குறைந்த பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை அனைத்து படங்களிலும் இவர் தான் உள்ளார்.

#image_title

ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமான யோகி பாபு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவருக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். அவர் நுழைந்த சமயத்தில் வடிவேலு சந்தானம் என அனைவரும் காமெடியில் இருந்து விலக யோகி பாபு அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

இவர் காமெடியனாக மட்டுமின்றி மண்டேலா மற்றும் கூர்கா போன்ற படங்களில் ஹீரோவாகவும் அசத்தி உள்ளார். அதுமட்டுமல்ல கோலமாவு கோகிலா படத்தில் இவருக்கென தனி பாட்டு ஒன்றும் இருந்தது. ஆனால் இதுவரை யோகி பாபு டான்ஸ் மட்டும் தான் ஆடவில்லை.

#image_title

சமீபத்தில் அதற்கான காரணம் குறித்து யோகி பாபு பேசியுள்ளார். அதாவது ஒரு படம் ஒன்றில் பாடல் காட்சி ஒன்றை இரவு நேரத்தில் படமாக்கி உள்ளனர். அதில் யோகி பாபு சரியாக ஆடவில்லையாம். அதனால் அந்த காட்சி நிறைய டேக் சென்றுள்ளது.

அப்போது யோகி பாபுவிற்கு பின்னால் நடனமாடி கொண்டிருந்த பெண் ஒருவர் எனக்கு மார்பே வலிக்குது. இவன் வேற சரியா ஆடி தொலைக்க மாட்டேங்குறான் என்று யோகி பாபு காதுபட பேசியுள்ளார். அதனை கேட்ட யோகி பாபு இனி நம்மால் யாரும் கஷ்டப்பட கூடாது என்பதால் அன்றுடன் நடனத்தை விட்டு விட்டாராம்.

Continue Reading

More in Cinema

To Top