General
போட்டியில் தோற்ற மாணவர்கள்… அனைவர் முன்பும் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்….!!!!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தோற்றதால், உடற்கல்வி ஆசிரியர் அவர்களை அடித்தும் மிதித்தும் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கொளத்தூரை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கால்பந்து போட்டியில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை தரையில் அமர வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியது மட்டுமின்றி ஷூ காலால் எட்டி உதைத்தும் கன்னத்தில் அறைந்தும் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகிறார்கள்