General
ஒருவேளை அட்மின் போட்டிருப்பார்…. வீடியோ குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன்….!!!
ஆட்சியிலும் பங்கு வேண்டும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தும் பழைய வீடியோ ஒன்று இன்று காலை அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டது. அதுவும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை நாடு திரும்பிய சமயத்தில் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்துள்ள திருமாளவன் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்திலும் பங்கு கேட்கிறார் என்ற கேள்விகள் எழ தொடங்கியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், “அந்த பழைய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் எனது அட்மின் பதிவிட்டிருக்கலாம். அது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாடு நீண்டகாலமாக உள்ளது” என கூறியுள்ளார்.