Cinema
கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய கமல்…. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்…!!!!
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் மற்றும் ஆண்ட்ரியா, நாசர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தான் உத்தமவில்லன். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

#image_title
முன்னதாக மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கை தான் திருப்பதி பிரதர்ஸ் எடுக்க விரும்பி உள்ளனர். அதை கமலிடம் கூறியபோது அவர் தான் உத்தமவில்லன் கதை நன்றாக இருக்கும். ஒருவேளை படம் நஷ்டமானால் நான் உங்களுக்கு வேறு படம் நடித்து கொடுக்கிறேன் என்று உத்திரவாதம் அளித்துள்ளார்.
அதுமட்டுமல்ல த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் வேறு நிறுவனத்திற்கு நடித்து கொடுத்து விட்டார். இதற்கிடையில் உத்தமவில்லன் படம் படுதோல்வி அடைந்தது. இந்த படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தால் நஷ்டத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.

#image_title
மேலும் கமல் வாக்குறுதி அளித்தது போல இத்தனை ஆண்டுகளில் இன்னும் அவர் படமும் நடித்து கொடுக்கவில்லை. அதுகுறித்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது.
அந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசன் தங்களிடம் ஒப்புக்கொண்டபடி தங்கள் நிறுவனத்திற்கு பிடித்த கதையில் நடிக்க அவருடன் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என கோரியுள்ளனர். வாக்கு கொடுத்து விட்டு மேடையில் அதை காப்பாற்ற தவறிய ஆண்டவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.