Television
கோபி ராதிகா இடையே வெடித்த சண்டை…. பயத்தில் அலறிய மயூ…!!!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் எழில் வீட்டை விட்டு வெளியே சென்றதை கூறுகிறார். அதை கேட்டு கடுப்பான ராதிகா உங்க வீட்டு விஷயத்தை நான் கேட்க விரும்பல என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பின் சிறிது நேரம் கழித்து சாப்பாடு கொண்டு வந்து வைக்கிறார். அதை பார்த்த கோபி சாப்பாட்டை தட்டி விட்டு நான் சோத்துக்கு வழி இல்லாம இங்க வந்து இருக்கேனா? சாப்பாடு வேணும்னா நான் ஹோட்டல்லயே சாப்பிட்டுப்பேன்.

today episode in baakiyalakshmi
ஆனா வீட்டுக்கு வந்தா கொஞ்சமாவது மனசு விட்டு நிம்மதியா பேசலாம்னு நினைச்சேன். இங்க நிம்மதியே இல்ல என்று கூறி சண்டை போடுகிறார். அதை பார்த்து மயூ பயப்படுகிறார். உடனே கோபி மயூவிடம் சாரி கேட்கிறார். அதற்கு ராதிகா இதுவே உங்க பொண்ணு இனியாவா இருந்தா இப்படி பண்ணுவீங்களா? என்னதான் இருந்தாலும் மயூவை நீங்க பிரிச்சு தான பார்ப்பீங்க என்று கூறி சண்டை போடுகிறார். அதற்கு கோபி எனக்கு இனியாவும் மயூவும் ஒன்னு தான். இவளும் என் பொண்ணு தான் என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

today episode in baakiyalakshmi
பின் அடுத்த நாள் காலை வரை கோபி தட்டிவிட்ட சாப்பாடு சுத்தம் செய்யாமல் அப்படியே இருக்கிறது. அந்த சமயத்தில் கோபி பாக்கியாவுடன் இருந்ததை நினைத்து பார்க்கிறார். அதன் பின்னர் மயூ தனக்கு கெட்ட கெட்ட கனவா வருது. நீங்க ரெண்டு பேரும் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கீங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இனிமே சண்டை போடாதீங்க என்று கூறுகிறார். அதை கேட்ட ராதிகா இனிமே நாங்க சண்டை போட மாட்டோம் என்று கூறி மயூவை சமாதானம் செய்கிறார்.

today episode in baakiyalakshmi
மற்றொரு புறம் பாக்கியா வீட்டில் ராமமூர்த்தியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தான் இரண்டு ஹோட்டல்கள் பார்த்து வைத்திருப்பதாக செழியன் கூறுகிறார். ஆனால் பாக்கியாவோ ஒரு நாள் தான் இருக்கு அதனால ஹோட்டல்ல வேண்டாம் நாம கோவில்ல பங்ஷனை வச்சுக்கலாம் என்று கூறுகிறார். அந்த சமயத்தில் அங்கு வரும் ஈஸ்வரியிடம் மாமாவின் பிறந்த நாளை கோவிலில் கொண்டாடலாம் என முடிவு செய்துள்ளோம் நீங்க என்ன சொல்றீங்க என பாக்கியா கேட்கிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.