Connect with us
   
Today episode in sirakadikka asai

Television

முத்துவை ஏத்திவிட்ட விஜயா…. மீண்டும் குடித்துவிட்ட வந்த முத்துவால் அவமானப்பட்ட மீனா…!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யாவின் பிறந்த நாளுக்கு போகக் கூடாது என கூறி விட்டு முத்து சென்று விடுகிறார். அப்போது அங்கு வரும் ஸ்ருதி உங்க தம்பி பிறந்த நாளுக்கு நீங்க போகக் கூடாதுனு சொல்ல அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? அதேமாதிரி நீங்க சொன்னா அவரு கேட்பாரா? நீங்க போயிட்டு வாங்க என மீனாவை குழப்பி விடுகிறார்.

Today episode in sirakadikka asai

Today episode in sirakadikka asai

இதை ஒளிந்து இருந்து விஜயா கேட்டு விடுகிறார். இதற்கிடையில் கோவிலில் அக்கா வரலைனா எனக்கு எதுவும் வேண்டாமென சத்யா கூற அந்த சமயத்தில் சரியாக மீனா அங்கு வருகிறார். ஆனால் தனக்கு வேலை இருக்கு எனவே சீக்கிரம் போக வேண்டும் என்று மட்டும் கூறுகிறார். அதே நேரத்தில் முத்து வீட்டுக்கு வந்து மீனாவை வீடு முழுவதும் தேடுகிறார்.

Today episode in sirakadikka asai

Today episode in sirakadikka asai

Today episode in sirakadikka asai

#image_titleToday episode in sirakadikka asai

அப்போது விஜயா மீனா இங்கில்லை அவ கோவிலுக்கு போய்ட்டா என்று கூறுகிறார். ஆனால் முத்து அதை நம்ப மறுக்கிறார். நான் போகக்கூடாதுனு சொல்லிருக்கேன். அதனால கண்டிப்பா அவ என் பேச்சை மீறி போக மாட்டா. அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என கூறுகிறார். இருப்பினும் விஜயா என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைனா நீ கோவிலுக்கு போய் பாரு என முத்துவை ஏத்திவிடுகிறார்.

#image_title

Today episode in sirakadikka asai

Today episode in sirakadikka asai

உடனே முத்து கோவிலுக்கு செல்ல அங்கு மீனா இருப்பதை பார்த்து ஷாக்காகிறார். பின் கூழ் ஊற்ற சொல்லி முறைத்து கொண்டே கப்பை நீட்டுகிறார். அதை பார்த்து மீனா மிரண்டு போகிறார். பின்னர் மீனா தன்னை ஏமாற்றியதை நினைத்து வருத்தப்பட்டு பேசிய முத்து அங்கிருந்து சென்று விடுகிறார். அதனை தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் மீனா நீண்ட நேரம் முத்துவுக்காக காத்திருக்க அவரோ குடித்து விட்டு வருகிறார். மேலும் மீனா தன்னை அவமானப்படுத்தி விட்டு கோவிலுக்கு சென்றதை நினைத்து வருத்தப்பட்டு பேசி அப்படியே கட்டிலில் படுத்து விடுகிறார். இதை பார்த்த விஜயா நான் இன்னும் நிறையா எதிர்பார்த்தேன் என கூறி மீனாவை அசிங்கப்படுத்தி விட்டு சொல்வதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.

Continue Reading

More in Television

To Top