Television
அவளை தொட்டு தொட்டு பேசுறாரு…. குக் வித் கோமாளி புகழால் வேதனை அடைந்த டிடிஎஃப் வாசன்….!!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஷாலின் சோயா போட்டியாளரகா பங்கேற்றுள்ளார். இவர் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.

#image_title
அதனை தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் அதுகுறித்து எதுவும் பதிலளிக்காத இவர்கள் தொடர்ந்து தங்களின் புகைப்படங்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி வீடியோ ஒன்றில் பேசியுள்ள டிடிஎஃப் வாசன், “குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்லும்போதே குரேஷி மற்றும் இர்ஃபானிடம் சோயாவை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி தான் அனுப்பி வைத்தேன். ஆனால் புகழ் அண்ணா அவளை தொட்டு தொட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது” என்று அவரின் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

#image_title
புகழ் முன்னதாக கடந்த நான்கு சீசன்களிலும் பங்கேற்று பெண் போட்டியாளர்களான ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷா குப்தா மற்றும் ரித்திகா என அனைத்து பெண்களிடமும் ஜொள்ளு விடுவது அவர்களுடன் ரொமான்ஸ் செய்வது என்று தான் செய்து கொண்டிருக்கிறார்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் புகழின் இந்த செயல் தான் அவரை பிரபலமாக்கியது என்று கூட கூறலாம். தற்போது இந்த சீசனிலும் அவர் அதை தான் செய்து வருகிறார். இருப்பினும் கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுகிறாரோ என்று பலரும் நினைத்து வருகிறார்கள். டிடிஎஃப் வாசன் இவ்வளவு வருந்தும் அளவிற்கு புகழ் அலப்பறை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.