Connect with us
   

General

சாலையோரம் அமர்ந்திருந்த இருவர்… திடீரென தாக்குதல் நடத்திய குள்ளநரி…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள ரெஹ்தி தாலுகாவின் சகோனியா பஞ்சாயத்துக்குட்பட்ட குடியிருப்பு வாசிகள் வசிக்கும் பகுதியில் நேற்று மாலை இருவர் சாலையோரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த குள்ளநரி ஒன்று எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அவர்கள் இருவரும் அதை கற்களால் அடித்து விரட்ட முயன்றனர். இருப்பினும் குள்ளநரி அதில் ஒருவரை கெட்டியாக கவ்வி பிடித்து கொண்டது. இருப்பினும் சமயோசிதமாக செயல்பட்ட அந்த நபர் குள்ளநரியை 12 அடி தூரத்திற்கு தூக்கி எறிந்தார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அந்த கிராமம் காடுகளால் சூழப்பட்டு இருப்பதால் குள்ளநரி மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லும்போது கையில் தடி எடுத்து செல்கிறார்கள். தற்போது இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading

More in General

To Top