General
திடீரென வந்த ரயில்…. நூலிழையில் உயிர் தப்பிய முதல்வர்…!!!
அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தற்போது வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த இரு மாநிலங்களிலும் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகளில் இருமாநில அரசுகளும் ஈடுபட்டு வருகிறது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் விஜயவாடா ரயில்வே பாலத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சந்திரபாபு நாயுடு சென்றிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென அந்த பாதையில் ரயில் வந்துவிட்டது. ரயில் மிகவும் அருகில் வந்துவிட்டதால், அவரால் பாலத்தில் இருந்து இறங்க முடியவில்லை. எனவே பாலத்தில் மிகவும் ஓரமாக நின்று உயிர் தப்பினார். இருப்பினும் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய வந்த முதல்வர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.